யாழ்ப்பாணத்தில் திருக்குறள் வளாகம் அமைக்கும் திருப்பணி வேலைகள் மும்முரமாக இடம்பெற்றுவருகிறது.
சிவபூமி அறக்கட்டனையினால் மாவிட்டபுரத்தில் திருக்குறள் வளாகம் அமைக்கும் திருப்பணி கடந்த இரண்டு ஆண்டு காலமாக மாவிட்டபுரம் சந்தியில் வைத்திய கலாநிதி கமலாகரன் என்பவரால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட நிலத்தில் திருக்குறள் முழுவதையும் கருங்கல்லில் பதித்து திருக்குறள் தொடர்பான ஆய்வுகளை மாணவர்கள் செய்வதற்கு வசதியாக மாடிக்கட்டடம், நூல் நிலையம் இவற்றை உள்ளடக்கிய சிவபூமி யாழ்ப்பாணம் திருக்குறள் வளாகம் வேகமாக திருப்பணி வேலைகள் இடம் பெற்று வருகின்றது.
இந்த ஆண்டு இறுதியில் திருக்குறள் வளாகம் திறப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 1,330 குறளும் ஏற்கனவே கருங்கல்லில் பதிவு செய்யப்பட்டு இங்கு பொருத்துவதற்கு கோண்டாவில் சிவபூமியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவின் சென்னையில் எப்படி திருக்குறளுக்காக வள்ளுவக்கோட்டம் இருக்கின்றதோ அதேபோல் யாழ்ப்பாணத்திலும் திருக்குறள் வளாகம் அமைய இருப்பது ஒரு வரப்பிரசாதம் இந்த ஆண்டு இறுதியில் திறப்புவிழா காணவிருக்கிறது.