யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தரம்-09 மாணவர்களின் பெற்றோர்களுக்குச் சிறுவர்களின் நடத்தை மாற்றம் , போதைப் பொருள் பாவனையைத் தடுத்தல் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்புத் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு வெள்ளிக்கிழமை (26.07.2024) மேற்படி கல்லூரியில் இடம்பெற்றது.
நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் மற்றும் போதைப்பொருள் தடுப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
