யாழ். போதனா வைத்தியசாலை தற்போது சகல பிரிவுகளையும் கொண்டு இயங்குகிறது

வடக்கில் யாழ். போதனா வைத்தியசாலை தற்போது சகல பிரிவுகளையும் கொண்டு இயங்குகின்றது. இருப்பினும் வைத்தியசாலையின் மேலும் கட்டட வசதிகளும் உபகரண மற்றும் ஆளணி வசதிகளும் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ விடுதிகளுக்காக இரண்டு கட்டில்களும் சில உபகரணங்களும் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்திருந்த அன்பரினால்  வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.

போதனா வைத்தியசாலையில் சில விடுதிகள் அண்மையில் திறக்கப்பட்டதும் மற்றும் இவ்வாறு புதிய உபகரணங்கள் வழங்கப்படுவதும் வைத்திய சேவையை மேலும் வலுப்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்.