2024 ஆம் ஆண்டிற்கான சிறுவர் தினத்தை முன்னிட்டு இதுவரை பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்யாத சிறுவர்களுக்கான நடமாடும் சேவையானது செவ்வாய்க்கிழமை (01.10.2024) காலை-09 மணி தொடக்கம் மாலை-04 மணி வரை யாழ்.மாவட்டச் செயலக கேட்போா் கூடத்தில் இடம்பெற்றது.
யாழ்.மாவட்டப் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற இந் நடமாடும் சேவையில் 41 சிறுவர்களுக்கான காலங்கடந்த பிறப்புப் பதிவு, 11 பேருக்கான பிறப்புச் சான்றிதழ் திருத்தம் உள்ளிட்ட சேவைகளுக்காக 60 பயனாளிகள் பங்குபற்றிப் பயன் பெற்றிருந்தனர்.