யாழ்.மாவட்டச் செயலகத்தில் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் மற்றும் பிரதேச அபிவிருத்தித் திட்டங்களின்  முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று வியாழக்கிழமை (25.07.2024 ) முற்பகல்-11 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

யாழ்.மாவட்டப் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை விரைவாகப் பூர்த்தி செய்வதற்காகத் திட்டங்களின் முன்னேற்றங்கள் மீளாய்வு செய்யப்பட்டன.