யாழ்.மாவட்டச் செயலகத்தில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல்

ஜனாதிபதித் தேர்தலுக்குக் குழுக் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட உதவித் தெரிவாட்சி அலுவலர்களுடனான முன்னாயத்தக் கலந்துரையாடல் திங்கட்கிழமை (12.08.2024) மாலை-03 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் யாழ்.மாவட்டப் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக குழுக்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டு ஆராயப்பட்டன.