யாழ்.மாவட்ட ஊராட்சி முற்றக் கலந்துரையாடல்

வடக்கு மாகாண  மகளிர் விவகார அமைச்சு மற்றும் யாழ்.மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில்     கிறிசலிஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ்.மாவட்ட ஊராட்சி முற்றக் கலந்துரையாடல் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (20.06.2024) காலை யாழ்.மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில்
இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் யாழ்.மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்நோக்கும் சவால்கள், அதற்கு உள்ளடங்கலான தீர்வுகள் ஆகிய விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.