சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி சட்டத்தரணி ஷான் ரணசூரிய , உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை, உயர்நீதிமன்றில் புதன்கிழமை (14) தாக்கல் செய்துள்ளார்.
அரசியலமைப்பை ஜனாதிபதி வேண்டுமென்றே மீறியுள்ளமையினால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட ரணில் விக்ரமசிங்க தகுதியற்றவர் என மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட ரணில் விக்ரமசிங்க தகுதியற்றவர் என குறிப்பிட்டுள்ள மனுதாரர் ஆகையால், இடைகால தடையுத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு மனுவின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.