ரஷ்யாவின் மிக அழகான பைக் ரைடர் டட்யானா ஓஸோலினா சாலை விபத்தில் உயிரிழப்பு!

ரஷ்யாவின் மிக அழகான பைக் ரைடர் என்று அழைக்கப்படும் டட்யானா ஓஸோலினா(38) துருக்கியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். டட்யானா ஓஸோலினா தனது சிவப்பு BMW S1000RR பைக்கை ஓட்டிச்சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த பைக் டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சம்பவ இடத்திலேயே டட்யான ஓஸோலினா உயிரிழந்தார்.