லொஹான் ரத்வத்த மாற்றப்பட்டார்

சட்டவிரோதமான முறையில் உதிரிபாகங்கள் பொருத்தப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 31 ஆம் திகதி கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட அவர், அன்றிரவு நுகேகொட மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய பின்னர், எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

சிறையில் இருந்தபோது ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்