வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ் வடமராட்சி துன்னாலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய விசுவாவசு வருட மஹோற்சவப் பெருவிழாவின் சமுத்திரத் தீர்த்தத் திருவிழா நேற்றுத் திங்கட்கிழமை (06.10.2025) மாலை-05.45 மணியளவில் வங்கக் கடலில் மிகவும் பக்திபூர்வமாகவும், சிறப்பாகவும் நடைபெற்றது. இவ் ஆலயத் தீர்த்தத் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டனர்.
இதேவேளை, இன்று செவ்வாய்க்கிழமை (07.10.2025) காலை கேணித் தீர்த்தத் திருவிழாவும், இன்று மாலை-06 மணியளவில் கொடியிறக்க உற்சவமும் இடம்பெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.






