வடிகானிலிருந்து ஆணின் சடலம் மீட்பு !

தலவாக்கலை – ஹட்டன் பிரதான வீதியின் கொட்டகலை,  ரொசிட்டா பிரதேசத்தில் வீதிக்கு அருகாமையில் காணப்படும்  ஆழமான கொங்கிரீட் வடிகான் ஒன்றிலிருந்து  ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்டுள்ள சடலம் ஆண் ஒருவருடையது எனவும்,  அவரது அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹட்டன் நீதிமன்றத்திற்கு இது தொடர்பில் அறிவித்துள்ள பொலிஸார் சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆரம்ப வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .