கேகாலை, மாவனல்லை,ஹெம்மாத்தகம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் அரச மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஐந்து பெண்கள் காயமடைந்துள்ளதாக ஹெம்மாத்தகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் கடந்த 24 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
விசேட வழிபாடு ஒன்றிற்காக விகாரைக்கு வருகை தந்திருந்த குழந்தைகள் உட்பட பலர் இந்த அரச மரத்திற்கு அருகில் அமர்ந்திருந்த போதே இந்த மரம் முறிந்து வீழ்ந்துள்ளது.
இதன்போது, 50 வயதுக்கு மேற்பட்ட ஐந்து பெண்கள் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களின் உடல் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.