விபத்தில் சிக்கி காயமடைந்த பல்கலை மாணவன் வைத்தியசாலையிலிருந்து தப்பியோட்டம்!

பதுளை பஸ் விபத்தில் சிக்கி காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவன் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (02) இடம்பெற்றுள்ளது.

ஜா – எல அலெக்சாண்டர் மாவத்தை பகுதியில் வசிக்கும் 24 வயதுடைய பல்கலைக்கழக மாணவனே தப்பிச் சென்றுள்ளார்.

இந்த மாணவன் கடந்த முதலாம் திகதி பதுளை, துன்ஹிந்த – அம்பகஹஓய 5ஆவது மைல்கல் பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்திலேயே சிக்கி காயமடைந்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் பதுளை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்