வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த பெண் கைது

கத்தாரில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி 40 இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளாார்.

இந்த பெண் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண் தற்போது கம்பளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.