மக்கள் போராட்ட முன்னணி கட்சி வேட்பாளர் ஒருவருக்காக ஆதரவு கோரி மற்றுமொரு வேட்பாளரின் வீட்டுக்கு பிரச்சாரத்துக்கு சென்ற ஆதரவாளர்களில் ஒருவர், வேட்பாளர் மீது மேற்கொண்ட தாக்குதலையடுத்து, அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதலை மேற்கொண்டவர் தப்பியோடியுள்ள சம்பவம் நேற்று (2) பிற்பகல் ஏறாவூரில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த கட்சி வேட்பாளரின் இல்லத்திற்கு தேர்தல் ஆதரவு கோரி அறுவர் சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவதாதம் கைகலப்பாக மாறியுள்ளது.
இந்த நிலையில் வேட்பாளர் மீது ஆதரவாளர் ஒருவர் தாக்குதலை மேற்கொண்டதுடன் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டார்.
இதனையடுத்து தாக்குதலை மேற்கொண்டவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.