வைத்தியர்களின் உத்தியோகபூர்வ முத்திரைகளை திருடி அதிகளவில் மாத்திரைகள் கொள்வனவு ; மூவர் கைது

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாற்றும் இரு வைத்தியர்களின் உத்தியோகபூர்வ முத்திரைகளை திருடி அதிகளவில் மாத்திரைகள் கொள்வனவு செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் அதே வைத்தியசாலையில் பணியாற்றும் பணியாளர் ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இரு வைத்தியர்களின் உத்தியோகபூர்வ முத்திரைகள் காணாமல்போயுள்ளதாக நுவரெலியா பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.