ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது

இரு குழுக்களுக்கிடையில் இடமபெற்ற மோதலை அடுத்து ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் இன்று மாலை 6.00 மணி முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதற்கமைய,  அனைத்து மாணவர்களும் இன்று வியாழக்கிழமை (12) மாலை 6.00 மணிக்குள் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.