3 சீனக் பெண்களிடமிருந்து பெறுமதியான பொருட்கள் திருட்டு

இலங்கைக்கு சுற்றுலா வந்த மூன்று சீனப் பெண்களிடமிருந்து பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக கிரிந்த பொலிஸ் நிலையத்திற்கு நேற்று திங்கட்கிழமை (12) முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

மூன்று இலட்சம் ரூபா பணம் மற்றும் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான கமெரா ஆகிய பொருட்களே இவ்வாறு  திருடப்பட்டுள்ளன.

சீனப் பெண்கள் மூவரும் சுற்றுலாவுக்காக இலங்கை வந்துள்ள நிலையில் திஸ்ஸமஹாராம, கிரிந்த பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிரிந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.