விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆயுதங்களே 300 கொள்கலன்களில் கொழும்பு வந்தன என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளதை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரின் தெரிவித்துள்ள விடயங்கள் முற்றிலும் ஆதாரமற்றது பொய்யானது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துயகொண்டா தெரிவித்துள்ளதுடன் ,இந்த குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எவையும் இல்லை என தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு விடயங்களை அரசியல்மயப்படுத்தக்கூடாது,பொதுஅரங்குகளில் பிழையாக சித்தரிக்ககூடாது என அவர் தெரிவித்துள்ளார்.