3,700 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

குருணாகல் பிரதேசத்தில் மஹவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபரொருவர் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருணாகல், அம்பன்பொல  பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய நபெரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 3,700 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.