39 பேர் வேட்புமனு தாக்கல்

கட்டுப்பணம் செலுத்திய 40 வேட்பாளர்களில் 39 பேர் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் நடவடிக்கை நிறைவு பெற்றுள்ளது.

கட்டுப்பணம் செலுத்திய 40 பேரில் 39 பேர், இராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகத்தில் இன்று (15)  வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

காலை 9 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கி 11 மணிக்கு நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.