அதிமுக தொண்டர்களை விரைவில் இணைப்பேன்

 தமிழக முன்னாள் முதல்வர்ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலைசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு கூறியதாவது:

பிரிந்து கிடக்கும் அதிமுக தொண்டர்கள் அனைவரும், ஒன்றாக இணைய வேண்டும் என்று விரும்புகின்றனர். எனவே,அதிமுக தொண்டர்கள் அனைவரையும் ஒன்றாக இணைப்பதற்கான பணிகள் வெகு விரைவில் தொடங்கி நடக்கும். நான் சசிகலாவை சந்திக்கும் நிகழ்ச்சி உரிய நேரத்தில் நடக்கும். தேவைப்படும்போது சந்தித்துப் பேசுவோம்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.