ஆக.13 முதல் 15 வரை வீடுகளில் தேசிய கொடி ஏற்றி கொண்டாட வேண்டும்

வீடுகளில் மூவர்ண கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடிட மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

சுதந்திர தினத்தையொட்டி, ஒவ்வொரு வீடுகளிலும் மூவர்ண தேசியக் கொடியை பறக்க விடுமாறு பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

அதன்படி, வரும் 13-ம் தேதி(நாளை) முதல் 15-ம் தேதி(வியாழக்கிழமை) வரை இதனைமேற்கொள்ள பொதுமக்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த இயக்கத்துக்கு ‘ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்றுவோம்’ (ஹர் கர்திரங்கா) என்று பெயரிடப்பட்டுள்ளது.

‘ஹர் கர் திரங்கா’ பிரச்சாரம்:

2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இயக்கம் நடப்பாண்டிலும் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக உயர்கல்வி நிறுவனங்களுக்கு, பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் சுதந்திரத்தை குறிக்கும் வகையில் ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடியை ஏற்றுவதற்காக ‘ஹர் கர் திரங்கா’ என்ற பிரச்சாரம் நாடு முழுவதும் வரும் 13-ம் தேதி முதல் 15-ம் தேதிவரை கொண்டாடப்பட உள்ளது.

செல்ஃபி எடுக்கலாம்: இந்த பிரச்சாரம் குறித்த தகவல்களை உயர்கல்வி நிறுவனங்கள் தங்களுடைய பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பங்குதாரர்களுடன் பரப்பி, 13-ம் தேதி முதல்15-ம் தேதி வரை சுதந்திர தினத்தைஆர்வமுடன் கொண்டாட ஊக்குவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் கொண்டாட்டங்களை செல்ஃபிகளாக படம் எடுக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்நிகழ்வுகளை www.harshartiranga.com என்ற இணையதளத்தில் செல்ஃபி படத்துடன் பகிரலாம். மேலும் எக்ஸ், யூ-டியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும் பதிவேற்றம் செய்யலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.