காவல் துறைக்கு 100 புதிய அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த காவல்துறை திருத்தச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.காவல், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சார்ந்த 100 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில்,

* மெரினா கடற்கரை கண்காணிப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

* குற்றப்பிரிவு, குற்றப்புலனாய்வு துறைக்கு நவீன உபகரணங்கள் வழங்கப்படும்.

* அனைத்து காவல்நிலையங்களுக்கு கலவரத்தை அடக்க பயன்படும் உபகரணங்கள் வழங்கப்படும்.

* ஏற்காட்டில் புதிய காவல் நிலையம் அமைக்கப்படும்.

*கோவை மாநகராட்சியை விபத்தில்லா மாநகராட்சியாக மாற்ற ரூ.5 கோடியில் செயல்திட்டம் செயல்படுத்தப்படும்.
* மக்களைக் காக்கும் காவல்துறை, தீயணைப்புத்துறையின் கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும்.* 201 புதிய காவல் குடியிருப்புகள் கட்டப்படும் என்று கூறினார்.