சென்னை மாநகராட்சி நிர்வாகம் எந்த செயல்பாடுமின்றி முடங்கி உள்ளது

கோவையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:சட்டசபையில் முதலமைச்சர் முன்னிலையில் டாஸ்மாக் மதுவில் கிக் இல்லாததால் கள்ளச்சாராயத்தை நோக்கி செல்வதாக மூத்த அமைச்சரே சொல்லி இருப்பது கண்டிக்கத்தக்கது.

டாஸ்மாக் மதுவில் Quality இல்லை என்று அமைச்சரே ஒத்துக்கொண்டு உள்ளார்.

மது குடிப்பவர்கள் தானாக திருந்தினால்தான் பிரச்சனை தீரும் என அமைச்சர் சொல்வதற்கு எதற்கு இந்த ஆட்சி. எல்லா இடத்திலும் டாஸ்மாக் கடை வைக்க முடியும். போலீஸ் ஸ்டேஷன் வைக்க முடியாதா? என்று மக்களின் கேள்வியை நான் எழுப்புகிறேன்.தமிழகம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

டாஸ்மாக், கள்ளச்சாராயம், போதைப்பொருட்கள் என சென்று கொண்டிருக்கிறது.சென்னை சைதாப்பேட்டையில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் குழந்தை பலியாகி உள்ளது.அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்வதற்கு கூட ரூ.2000 லஞ்சம் கேட்டு இருக்கிறார்கள்.

உயிருக்கு மரியாதை இல்லை. பணம் மட்டுமே பிரதானமாக இருக்கிறது.சென்னை மாநகராட்சி நிர்வாகம் எந்த செயல்பாடுமின்றி முடங்கி உள்ளது என்று அவர் கூறினார்.