முற்போக்கு கவிஞர் தணிகைச்செல்வன் மறைவையொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் செங்கல்பட்டில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை 1975-ம் ஆண்டு தொடங்கிய முன்னோடிகளில் ஒருவரான தணிகைச் செல்வன் அண்மையில் மறைந்தார். இந்நிலையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் செங்கல்பட்டு கிளையின் சார்பாக நேற்று (நவ.1) மாலை நினைவேந்தல், புகழஞ்சலி கூட்டம் கிளையின் செயற்குழு உறுப்பினர் செல்வமணி தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் இ.சங்கரதாஸ் முற்போக்கு கவிஞர். தணிக்கைச்செல்வனின் திருஉருவப் படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார். மவட்டப் பொருளாளர். என்.டி.அரங்கநாதன் நினைவேந்தல் உரையாற்றினார். கவிஞர் தணிக்கைச்செல்வன் அவர்களுக்காக முற்போக்கு கவிஞர்கள். செங்கை தாமஸ், சா.கா.பாரதிராஜா, சீனி சந்திரசேகர் ஆகியோர் கவிதாஞ்சலி செலுத்தினார்கள்.
மாவட்டச் செயலாளர் கவிசேகர் நிறைவாக புகழஞ்சலி நினைவேந்தல் உரையாற்றினார். செங்கல்பட்டு கிளைத் தலைவர் இராமமூர்த்தி அனைவருக்கும் செம்மலர் மாத இதழ் வழங்கினார். கிளையின் செயலாளர் முனிச்செல்வம் நிர்வாகிகள் சிவக்குமார், இள.பாண்டியன், நா.வீரமணி, அருணாச்சலம் ராமலிங்கம், அப்புக்குட்டி, பிரவீண் ஆகியோர் பங்கேற்றனர்.