சிங்கள கடைகளான ‘தம்ரோ பர்னிச்சர் கடை’களை முற்றுகையிடும் போராட்டம் தூத்துக்குடியில் 13-08-2024 காலையில் நடந்தது. முற்றுகையில் பங்கெடுத்த மே17 ஒருங்கிணைப்பாளர் தோழர் புருசோத்தமன் உள்ளிட்ட மே17 தோழர்களை வலுக்கட்டாயமாக இழுத்து, வன்முறையாக கைது செய்தது காவல்துறை.
தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற பேரவையின் எஸ்.ஆர்.பாண்டியன், ஸ்டெர்லைட் போராட்ட எதிர்ப்பு இயக்கத்தின் பேரா.பாத்திமாபாபு, மே17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, விடுதலை சிறுத்தைகளின் முரசு தமிழப்பன், காந்தி மள்ளர், மீனவர் இயக்கத்தின் ரீகன் உள்ளிட்டோர் பங்கெடுக்க எழுச்சியுடன் காவல்துறை அடக்குமுறையை மீறி நடந்தது.
‘மீனவரை கொலை செய்த சிங்கள கடற்படை மீது கொலை வழக்கைப் பதிவு செய்யவும், சிங்கள கடைகளை புறக்கணிக்கும்’ கோரிக்கையை வலுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடக்கிறது. தூத்துக்குடி காவல்துறையின் அடக்குமுறையை வன்மையாக கண்டிப்போம். அடக்குமுறையை மீறி மேலதிக சனநாயக மக்கள் அணிதிரள வேண்டுகிறோம்.
-மே17 இயக்கம்.