பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இந்த வருடம் நடைபெற்றுவந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நேற்று முன் தினம் நிறைவு பெற்றது. சுவாரஸ்யமான தருணங்கள் பல நிறைந்ததாக இந்த வருட ஒலிம்பிக்ஸ் போட்டிகள் அமைந்தன.
அந்த வகையில் அனைவரையும் வாயடைக்க வைக்கும் வகையில் பிரான்ஸ் நீச்சல் வீரர் லியான் மர்ச்சண்ட் அதிரடியான சாதனைக்குச் சொந்தக்காரராக உள்ளார்.
அதாவது, பாரீஸ் ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற மொத்த நாடுகளில், 184 நாடுகளை விட அதிக தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் லியான் மர்ச்சண்ட். இந்த வருட ஒலிம்பிக்சில், 200 Ľ Breaststroke, 200 L Butterfly, 200 LLi Individual Medley, 400 மீட்டர் Individual Medley ஆகிய போட்டிகளில் லியான் மர்ச்சண்ட் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
மேலும் 4×400 மீட்டர் Medley Relay-வில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார். 22 வயதே ஆகும் லியான் மர்ச்சண்ட் பங்கேற்கும் முதல் ஒலிம்பிக்சே இந்த பாரீஸ் ஒலிம்பிக்ஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.