இந்தியாவில் தயாரிக்கப்படும் ரொக்கெட் ஆயுதங்களை வாங்க பிரான்ஸ் ஆர்வம்

பிரான்ஸ் இந்தியாவின் பினாக்கா ரொக்கெட் ஆயுதங்களை வாங்க ஆர்வம் காட்டுகிறது.

இந்தியாவின் Pinaka Multi-Barrel Rocket Launcher (Pinaka MBRL) உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

தற்போது பிரான்ஸ் தனது ராணுவ தேவைகளுக்காக இந்த ஆயுதங்களை பெற ஆர்வம் காட்டுகிறது.

அர்மேனியாவிற்கு பினாக்கா ஆயுதங்களை ஏற்றுமதி செய்யப்பட்ட பிறகு, பிரான்ஸ் அதனை வாங்குவதற்கான நடவடிக்கைகளை ஆராய்ந்து வருகிறது.

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உருவாக்கிய பினாக்கா, 75 கி.மீ. வரை தாக்கும் திறன் கொண்டது.

இது பல ரொக்கெட்களை குறைந்த நேரத்தில் விரைவாக தாக்கும் திறன் கொண்டது.

குறிப்பாக, ரஷ்யா-உக்ரைன் மோதலின் போது இந்த ஆயுதங்கள் தனது திறனை வெளிப்படுத்தியது.

பிரான்சில் தற்போது இதற்குச் சமமான ஒரு ரொக்கெட் சிஸ்டம் இல்லை என்பதால், பினாக்கா குறித்து பிரான்ஸ் ராணுவம் ஆராய்ந்து வருகிறது.

இந்நிலையில், பிரான்ஸ் ராணுவத்தின் பிரிகேடியர் ஜெனரல் ஸ்டீஃபான் ரிசு (Stephane Richou), பினாக்கா உள்ளிட்ட பல ஆயுதங்களை பரிசீலிப்பதாக தெரிவித்தார். மேலும், சமீபத்தில் நடைபெற்ற இந்திய-பிரான்ஸ் இராணுவ பேச்சுவார்த்தையின் போது, இருதரப்பும் பரஸ்பர பாதுகாப்பு இலக்குகளைப் பற்றி விவாதித்தனர்.

 

இந்தியா-பிரான்ஸ் பாதுகாப்பு ஒத்துழைப்பும் பல ஆண்டுகளாக உறுதியான ஒன்றாக உள்ளது. ரஃபேல் (Rafale) போர் விமானங்கள் மற்றும் ஸ்கார்பின் வகை நீர்மூழ்கிக் கப்பல்களை (Scorpene-class submarines) இந்தியாவிற்கு வழங்கியுள்ள பிரான்ஸ், தற்போது இந்தியாவின் பினாக்காவை பரிசீலிக்கும் நிலையில் உள்ளது.

இந்திய ராணுவத்தில் 1990களின் நடுப்பகுதியில் பினாக்கா பயன்பாட்டில் வந்தது. கார்கில் போர் மற்றும் பிற முக்கிய போர்களில் இதன் செயல்திறன் முக்கிய பங்கை வகித்தது. சமீபத்தில் இதன் விரிவாக்கம் மூலம் 300 கி.மீ. தூரத்தை அடைய முடியுமென அறியப்பட்டுள்ளது.

இந்தியாவின் பினாக்கா பன்னாட்டு பாதுகாப்பு சந்தையில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்