இஸ்ரேலின் நடவடிக்கைகளால் அனைவரும் பதில் நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நிலையேற்படலாம் – ஈரான்

இஸ்ரேலின் நடவடிக்கைகள் காரணமாக அனைவரும் பதில் நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நிலையேற்படலாம் என ஈரான் ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.

இஸ்ரேலின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு சென்றுவிட்டன என இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார்.

ஈரான் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என அமெரிக்கா வேண்டுகோள் விடுக்கின்றது ஆனால் அவர்கள் இஸ்ரேலிற்கு பரந்துபட்ட ஆதரவை வழங்குகின்றனர் என தெரிவித்துள்ள ஈரான் ஜனாதிபதி மத்திய கிழக்கில் உள்ள  ஈரான் சார்பு அமைப்புகளிற்கு அமெரிக்கா செய்திகளை அனுப்பியது ஆனால் போர்க்களத்தில் சரியான பதிலை பெற்றுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.