இஸ்ரேல் சிறையில் உள்ள ஹமாஸ் உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டால் பணயக்கைதிகளை விடுதலை செய்ய தயார்

இஸ்ரேலின் சிறையில் உள்ள ஹமாஸ் உறுப்பினர்களை விடுதலை செய்தால் தன்னிடமுள்ள பணயக்கைதிகளை விடுதலை செய்ய தயார் என ஹமாஸ் அறிவித்துள்ளது.

ஒக்டோபர் ஏழாம் திகதி மோதல் ஆரம்பித்த பின்னர் முதல்தடவையாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஹமாசின் தலைவர் யஹ்யா சின்வர் இதனை அறிவித்துள்ளார்.

சியோனிஸ்ட் எதிரியின் சிறையில் உள்ள கைதிகள் விடுதலைசெய்யப்பட்டால் எதிர்ப்பாளர்களிடம் உள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுதலை செய்ய தயார் என அவர் அறிவித்துள்ளார்.