இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொள்வதை நியாயப்படுத்தினார் ஈரான் ஜனாதிபதி

ஹமாஸ் தலைவரை கொலை செய்தமைக்காக இஸ்ரேலிற்கு எதிராக பதில் தாக்குதலை மேற்கொள்ளவேண்டும் என ஈரான் சிந்திப்பது சரியான விடயம் என அந்த நாட்டின் ஜனாதிபதி மசூட் பெசெஸ்கியான் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஸ் பிரதமர் கெய்ர் ஸ்டாமெருடனான தொலைபேசி உரையாடலின் போது ஈரான் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிப்பாளனுக்கு தண்டனை வழங்குவது ஒருதேசத்தின் உரிமை என தெரிவித்துள்ள ஈரான் ஜனாதிபதி இவ்வாறான நடவடிக்கை குற்றங்களை ஆக்கிரமிப்பை நிறுத்துவதற்கு தீர்வு எனவும் தெரிவித்துள்ளார்.

காசாவிலும் வேறு பகுதிகளிலும் இஸ்ரேலின் முன்னொருபோதும் இ;ல்லாத மனிதாபிமான குற்;றங்கள் குறித்த மேற்குலகின் மௌனம் பொறுப்புணர்வற்றது என தெரிவித்துள்ள ஈரான் ஜனாதிபதி இஸ்ரேலின் இந்த நடவடிக்கை பிராந்திய சர்வதேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை  ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் இஸ்ரேல் ஈடுபடுவதற்கு தூண்டுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.