எனது அப்பா உயிருடன் இருக்கின்றார்” என நம்புகின்றேன்- ஹமாசினால் பணயக்கைதியாக பிடிக்கப்பட்டவரின் மகள்

ஹமாஸ் அமைப்பினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட பிரிட்டன் இஸ்ரேலியர்களின் குடும்பத்தவர்கள் யுத்த நிறுத்த உடன்படிக்கை குறித்து எச்சரிக்கை கலந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளனர்.

யுத்த நிறுத்த உடன்படிக்கையை தொடர்ந்து ஹமாசினால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளில் உயிருடன் இருப்பவர்கள் கட்டம் கட்டமாக விடுதலைசெய்யப்படுவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

எனது அப்பா உயிருடன் இருக்கின்றார் என நம்புகின்றேன் என 84 வயது பணயக்கைதியான ஒடெட் லிப்சிட்சின் மகள் சரோன் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

அதிசயங்கள் நிகழ்வது வழமை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எலிஷராபி என்ற பணயக்கைதியின் குடும்பத்தவர்கள் யுத்த நிறுத்த உடன்படிக்கையை தொடர்ந்து உடனடியாக அவர் விடுதலையாவார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

முதல்கட்டமாக 33 பணயக்கைதிகளும் இஸ்ரேலிய சிறையில் உள்ள பாலஸ்தீனியர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்வாறன  ஒரு தருணத்தில் நான் எப்படி உணர்வேன் என பல தடவை நான் சிந்தித்துள்ளேன்,ஆனால் அது தற்போது நடைபெறுகின்றது என்ன செய்வது என எனக்கு விளங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வேல்சின் தென்பகுதியில் உள்ள பிரிட்ஜென்டை சேர்ந்த பிரிஸ்லி தனது மைத்துனரை விடுவிப்பதில் பின்னடைவு ஏற்படக்கூடும் என அஞ்சுவதால் தான் எச்சரிக்கையாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இது வரை எங்களிற்கு கிடைத்த முதல் சிறந்த செய்தி இது என தெரிவித்துள்ள ஆனால் இதில் சம்பந்தப்பட்ட தரப்பினர் என்ன செய்வார்கள் என்பது தெரியாது-என குறிப்பிட்டுள்ளார்.