கனடாவின் ஒட்டாவாவில் 19 வயது இளைஞர் சுட்டுக் கொலை

கனடாவின் ஒட்டாவாவில் 19 வயது இளைஞர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.கனடாவின் ஒட்டாவாவில் வெள்ளிக்கிழமை இளம் வயதுடைய நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

19 வயதான யூசுப் சலாமான் (Yousef Salaman) என்ற இளைஞர்  ஸ்மித் சாலை மற்றும் செயின்ட்  லாரன்ட் பவுலவார்டு  சந்திப்புக்கு அருகில் உள்ள ரஸ்ஸல் சாலையின் 1700 தொகுதியில் இரவு 10 மணியளவில் நடந்த துப்பாக்கி சூட்டில் கொலை செய்யப்பட்டார்.

 

ஓட்டாவா பொலிஸ் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் துப்பாக்கி சூடு நடந்த நேரத்தில் அந்த பகுதியில் இருந்தவர்கள் அல்லது அந்த பகுதியின் கண்காணிப்பு காணொளி (surveillance video) இருந்தால் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

19-year-old-man-shoot-dead-in-canada-ottawa

அதே சமயம் இதுவரை சந்தேக நபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.