கனடாவில் காணாமல் போன தமிழர் திட்டமிட்டு கடத்தப்பட்டிருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பிரம்டன் பகுதியை சேர்ந்த 65 வயதான யோகராஜ் என்ற தமிழர் கடந்த இரண்டு வாரங்களாக காணாமல் போயுள்ளார்.
அவரை கண்டுபிடிக்கும் தீவிர நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன், மக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.கடந்த ஜூலை மாதம் 31ம் திகதி க்ரிக் மற்றும் விட்டொப்பி வீதிகளுக்கு அருகாமையில் யோகராஜ் இறுதியாக தென்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன யோகராஜ் ஐந்து அடி இரண்டு அங்குலம் உயரமானவர் எனவும் சுமார் 150 பவுன்ட் எடையுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இறுதியாக நீல நிற சட்டையும், கறுப்பு நிற காற்சட்டையும் அணிந்திருந்தார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் தொடர்பிலான தகவல்கள் ஏதேனும் இருந்தால் அவற்றை வழங்குமாறு பீல் பிராந்திய போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.