கனடாவில் நியூ பிரவுன் ஸ்வீட் பிராந்தியத்தின் ரொத்சேய் பகுதியில் வீடு ஒன்றிலிருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் போது ஆண் ஒருவரினதும் பெண் ஒருவரினதும் சடலங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இருவரினதும் மரணத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவம் காரணமாக பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனை நிறைவடையும் வரையில் இது தொடர்பில் எவ்வித கருத்துகளையும் வெளியிட முடியாது என மேலும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.