கிளப் வசந்த கொலை விவகாரம்: விசாரணையில் சிக்கிய ஆயுததாரிகள்

கிளப் வசந்த கொலையுடன் தொடர்புடைய ஆயுததாரிகள் லொகு பட்டியின் சகோதரியின் கணவரான சதுரங்க மதுசங்கவின்  உதவியுடன் பேருந்தில் கதிர்காமம் பகுதிக்கு தப்பிச்சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த (08) அத்துருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையமொன்றின் திறப்பு விழாவில் வைத்து, துப்பாக்கிதாரிகள் இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த மற்றும் பிரபல பாடகி கே. சுஜீவாவின் கணவரான நயன வாசுல ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

சம்பவத்தில் பாடகி கே. சுஜீவா, கிளப் வசந்தவின் மனைவி உள்ளிட்ட மேலும் ஒரு பெண் மற்றும் ஆண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்ட ஆயுததாரிகள் சம்பவ இடத்துக்கு காரில் வந்து துப்பாக்கிச்சூட்னை மேற்கொண்டு, அத்துருகிரிய கொரோதொட்ட பிரதேசத்தில் வானில் மாறி தப்பிச்சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட அத்துருகிரிய மேல் மாகாண புலனாய்வு குற்றத்தடுப்பு பிரிவின் விசேட பொலிஸ் குழுவினர் வானை ஓட்டிச் சென்ற நபரையும் மற்றுமொருவரையும் கைது செய்திருந்தனர்.

வெளி நாட்டிலிருந்து இக்கொலையை திட்டமிட்டதாக கூறப்படும் லொகு பட்டியின் சகோதரியின் கணவரான “சதுரங்க மதுசங்க” என்ற நபர் மத்துகம பிரதேசத்தில் இருந்து சுமார் நாற்பது இலட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டு அத்துருகிரிய பகுதிக்கு பேருந்தில் சென்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கிளப் வசந்த கொலை விவகாரம்: விசாரணையில் சிக்கிய ஆயுததாரிகள் | Club Wasantha Murter Investigation Update

இந்த கொலையை திட்டமிடுவதற்காக அத்துரிகிரிய பிரதேசத்தில் வாடகை அடிப்படையில் வீடு ஒன்றையும் வாங்கி வசித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த கொலையை செய்த பின்னர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வெள்ளை நிற காரில் சென்று அத்துருகிரிய கொரதொட்ட பகுதியில் காரை நிறுத்திவிட்டு வானொன்றில் சென்றுள்ளனர்.

வெளிநாட்டிற்கு தப்பிச்செல்ல முயற்சி

இந்த வானின் சாரதி லொகு பட்டியின்  உதவியாளரான அஹுங்கல்ல பிரதேசத்தை சேர்ந்த “கலிங்க கசுன் உதயங்க” என்ற நபர் எனவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து துப்பாக்கித்தாரிகள் வானில் இருந்து இறங்கி கடுவெல பிரதேசத்தில் வைத்து லொகு பட்டியின் சகோதரியின் கணவரான “சதுரங்க மதுசங்க” உடன் பேருந்தில் கதிர்காமம் பகுதிக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

கிளப் வசந்த கொலை விவகாரம்: விசாரணையில் சிக்கிய ஆயுததாரிகள் | Club Wasantha Murter Investigation Update

இதன்பின்னர், வெளிநாடு செல்ல தயாரான நிலையில் ​​அத்துரிகிரிய மேல் மாகாண புலனாய்வு குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட வானின் சாரதியான “சதுரங்க மதுசங்க” மற்றும் லொகு பட்டியவின் நெருங்கிய சீடரான “கலிங்க கசுன் உதயங்க” என்ற இருவரும் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.