மன்னார் பூநகரியில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின்திட்டத்தினை சிறிலங்கா அரசாங்கம் நிறுத்தவில்லைஎன அதானிகுழுமம் தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள அதானி குழுமம் காற்றாலை மின்உற்பத்தி திட்டம் இரத்துசெய்யப்படவில்லை என உறுதியாக தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் பசுமை வலுசக்திதுறையில் ஒரு பில்லியன் டொலரை முதலீடு செய்வது குறித்து அதானி உறுதியாக உள்ளார் என அதானி குழுமம் தெரிவித்துள்ளது.