சீனாவிற்கு எதிராக வரிகளை அதிகரிப்பதை தவிர்க்கின்றாரா டிரம்ப் – பேட்டியில் தெரிவித்திருப்பது என்ன?

சீனாவிற்கு எதிரான வரிஅதிகரிப்பை தான் தவிர்த்துக்கொள்ளகூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பொக்ஸ் நியுஸ் பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சீன ஜனாதிபதிக்கும் டிரம்பிற்கும் இடையிலான உறவு குறித்து பதிலளித்துள்ள அவர் சமீபத்தில் சிறந்த நட்புறவுடனான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

கொவிட்டிற்கு முன்பாக தனக்கும் சீன ஜனாதிபதிக்கும் சிறந்த உறவுகள் காணப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனாஒரு பேராவல் உள்ள நாடு சீன ஜனாதிபதியும் பேராவல் உள்ள நபர் என தெரிவித்துள்ள டிரம்ப் அவர் எனது நண்பர் போன்றவர் சிறந்த நட்புறவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

சீனாவிற்கு எதிரான வரிகளை அதிகரிக்கும் திட்டத்தை நியாயப்படுத்தியுள்ள டிரம்ப் சீனா அமெரிக்காவிடமிருந்து அதிகளவு பணத்தை பெறுகின்றது அந்த பணத்தை கொண்டு தன்னை அபிவிருத்தி செய்கின்றது என தெரிவித்துள்ளார்.

சீனா மீது எங்களிற்கு ஒரு பலம்தான் உள்ளது அது வரி என தெரிவித்துள்ள டிரம்ப் அவர்கள் அதனை விரும்பவில்லை ,நான் சீனாவிற்கு எதிரான வரிகளை அதிகரிப்பதை தவிர்க்கலாம்,என குறிப்பிட்டுள்ளார்.