ஜேர்மனிக்கு அவசரமாக பணியாளர்கள் தேவை: ஜேர்மன் தூதர் கூறும் செய்தி

ஜேர்மனிக்கு அவசரமாக திறன்மிகுப் பணியாளர்கள் தேவை என இந்தியாவுக்கான ஜேர்மன் தூதர் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனி, பொருளாதார வீழ்ச்சி மற்றும் அரசியல் நிலையற்ற தன்மையை எதிர்கொண்டுள்ளது.

இந்நிலையில், ஜேர்மனிக்கு அவசரமாக திறன்மிகுப் பணியாளர்கள் தேவை என இந்தியாவுக்கான ஜேர்மன் தூதரான பிலிப் ஆக்கர்மேன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜேர்மனி புலம்பெயர்தல் விதிகளில் மாற்றங்கள் செய்துள்ளது என்று கூறியுள்ள பிலிப், இப்போதைக்கு மிக எளிய புலம்பெயர்தல் விதிகளைக் கொண்ட நாடு ஜேர்மனிதான் என்பேன் என்றும் கூறியுள்ளார்.

அதே நேரத்தில், ஜேர்மனிக்கு புலம்பெயர்வோர் சந்திக்கும் ஒரே பிரச்சினை, அதுவும் பெரிய பிரச்சினை, மொழிதான் என்பதையும் ஒப்புக்கொள்ள பிலிப் தயங்கவில்லை.