டிரம்ப் புத்திசாலி, அனுபவசாலி; தீர்வுகளை காணக்கூடியவர்

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் அனுபவசாலி, புத்திசாலி; தீர்வுகளை கண்டறியக்கூடியவர் என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் யுத்தம் தொடர்பில் மேற்குலகிற்கும் ரஸ்யாவிற்கும் இடையிலான பதட்டநிலை அதிகரித்துள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கஜகஸ்தானில் செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள புட்டின் புதிதாக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கு மேலதிக நெருக்கடிகளை உருவாக்கியமைக்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனை  சாடியுள்ளார்.

ஒரேசினிக் என்ற கண்டம் விட்டு கண்டம் பாயு அணு ஏவுகணையை பயன்படுத்தி உக்ரைனை தாக்கப்போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

ஏடிசிஎம்எஸ்  ஏவுகணைகளை பயன்படுத்தி ரஸ்யாவிற்குள் தாக்குதலை மேற்கொள்வதற்கு பைடன் அனுமதியளித்துள்ளமை வோசிங்டன் மொஸ்கோவிற்கு இடையிலான உறவுகளை பாதிக்குமா என்ற கேள்விக்கு டிரம்ப் பதவியேற்ற பின்னர் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் என புட்டின் தெரிவித்துள்ளார்.

எனக்கு தெரிந்தவரை புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி புத்திசாலி ஏற்கனவே அனுபவம் உள்ளவர் அவர் தீர்வுகளை கண்டறிவார் என புட்டின் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்