துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து பிரான்சில் மோதலில் இறங்கிய 600 பேர்

பிரெஞ்சு நகரமொன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் ஐந்து பேர் காயமடைந்தனர். ஆனால், அதைத் தொடர்ந்து நடந்தது, யாரும் எதிர்பாராத ஒரு விடயம்.

நேற்று முன்தினம் இரவு 10.45 மணியளவில், பிரெஞ்சு நகரமான Poitiersஇல், கார் ஒன்றில் வந்த சிலர் உணவகம் ஒன்றை நோக்கி திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

அதில், ஐந்து இளைஞர்கள் காயமடைந்தார்கள். 15 வயது சிறுவன் ஒருவனது தலையில் குண்டு பாய்ந்ததால், அவனது நிலைமை அவனது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இரண்டு இளைஞர்களும் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

அந்த துப்பாக்கிச்சூடு போதைக்கடத்தல் கும்பல்கள் தொடர்பிலானதாம். ஆக, இரண்டு போதைக் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைய, அங்கு பெரும் மோதல் உருவாகியுள்ளது.

400 முதல் 600 பேர் வரை அங்கு திரண்டிருக்கலாம் என்று கூறியுள்ள உள்துறை அமைச்சரான Bruno Retailleau, ஆனால், அவர்களில் எத்தனை பேர் அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவில்லை என்கிறார்.

பரபரப்பை உருவாக்கிய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்