நியூசிலாந்து நாட்டில் இருந்து எண்ணற்ற மக்கள் வெளியேறி வேறு நாடுகளுக்கு குடி பெயர்ந்து வருகின்றனர். அந்நாட்டில் அதிகரித்துள்ள வேலைவாய்ப்பின்மை பிரச்சனை, பொருளாதார மந்தநிலை மற்றும் வட்டி விகிதங்கள் உயர்வால் மக்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
கடந்த 1 வருடத்தில் மட்டும் நியூசிலாந்து நாட்டில் இருந்து ௧,31,200 மக்கள் வெளியேறியுள்ளனர். இந்த எண்ணிக்கை வேறு எப்போதும் இல்லாத அளவிற்கு மிக அதிகமானதாகும். நாட்டை விட்டு வெளியேறிய மக்களின் மூன்றில் ஒருபங்கினர் ஆஸ்திரேலியா நாட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர்.