பாரீஸ் ஒலிம்பிக்: இறுதி சுற்றுக்கு முன்னேறினார் மானு பாகெர்

பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவு தகுச்சுற்றில் இந்தியாவின் மானு பாகெர், ரிதம் சங்வான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

44 பேர் கலந்து கொண்டதில் இந்திய வீராங்கனை மானு பாகெர் 580-27x புள்ளிகள் பெற்று 3-வது இடம் பிடித்தார்.

இதன்மூலம் பதக்கத்திற்கான சுற்றுக்கு (இறுதி சுற்று) முன்னேறியுள்ளார்.ஹங்கேரி வீராங்கனை (582-22x) முதலிடமும், தென்கொரிய வீராங்கனை (582-20x) 2-வது இடமும் பிடித்தனர்.

ரிதம் சங்வான் 573-14x புள்ளிகள் பெற்று 15-வது இடம் பிடித்து ஏமாற்றம் அடைந்தார். நாளை பதக்கத்திற்கான சுற்று நடைபெறுகிறது. இதில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் பதக்கத்தை உறுதி செய்வார்கள்