பாலஸ்தீன மக்களிற்கும் யுத்த நிறுத்தம் ஒரு சிறந்த செய்தி!

இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையிலான யுத்த நிறுத்த உடன்படிக்கை  குறித்த அறிவிப்பை  வரவேற்றுள்ள அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா யுத்த நிறுத்தம் இந்த மிகமோசமான அத்தியாயத்தின் இரத்தக்களறியை முடிவிற்கு கொண்டுவருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடக பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

இஸ்ரேலிற்கும் பிரிட்டனிற்கும் இடையில் இன்று அறிவிக்கப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கை ஒக்டோபர் ஏழாம் திகதி பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கும்இஒருவருடகாலத்திற்கும் மேலாக பெரும் துயரத்தை எதிர்கொண்டுள்ள பொதுமக்களிற்கும்  பாலஸ்தீன மக்களிற்கும்இஇந்த மோசமான அத்தியாயம் முடிவிற்கு வரவேண்டும் என விரும்பியவர்களிற்கும் ஒரு சிறந்த செய்தியாகும்.

இந்த உடன்படிக்கை உட்பட எந்த உடன்பாட்டினாலும் தங்கள் உறவுகளை இழந்தவர்களின் வேதனைகளை போக்க முடியாது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

மேலும் இந்த உடன்பாட்டின் மூலம் பாலஸ்தீனியர்களிற்கும் இஸ்ரேலியர்களிற்கும் இடையிலான நீண்டகால பிணக்கிற்கு முடிவை காணமுடியாது.

ஆனால் இந்த யுத்த நிறுத்த உடன்படிக்கை இரத்தக்களறியை நிறுத்தும்இமக்கள் தங்கள் வீடுகளிற்கு திரும்புவதற்கு உதவும்இபட்டினியின் பிடியில் சிக்குண்டுள்ள மில்லியன் கணக்கான மக்களிற்கு உதவிப்பொருட்கள் சென்றடைவதற்கு உதவியாக அமையும்.

நாங்கள் அனைவரும் இதற்கு ஆதரவளிக்கவேண்டும்.