பிரான்சில் புகையிரத பாதைகளை இலக்குவைத்து தாக்குதல்கள்

ஒலிம்பிக் போட்டிகளிற்கு முன்னதாக பாரிசின் முக்கியமான புகையிரதபாதைகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் காரணமாக பிரான்சின் புகையிரத சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் புகையிரத பாதைகளில் தீமூண்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகின்றன.

புகையிரத சேவைகளை செயல் இழக்கச்செய்யும் விதத்தில் தொடர்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.