பிரான்சில் Tesla கார்களின் விற்பனை 63 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய மின்சார வாகன சந்தையான பிரான்சில், டெஸ்லாவின் (Tesla) விற்பனை 63 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
பிரான்ஸ் La Plateforme Automobile தொழில் அமைப்பின் தரவுகளின்படி, டெஸ்லா 2024 ஜனவரியில் 3,118 கார்கள் பதிவு செய்த நிலையில், 2025 ஜனவரியில் 1,141 மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக, மொத்த கார் விற்பனை 6.2 சதவீதம் குறைந்ததுடன், மின்சார வாகனங்களின் விற்பனை 0.5 சதவீதம் குறைந்துள்ளது.
குறிப்பாக, ஜேர்மனியின் வலதுசாரி கட்சியான Alternative for Germany (AfD)-க்கு ஆதரவு அளித்ததோடு, பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டார்மருக்கும் எதிராக கருத்து தெரிவித்தார். இதனால், டெஸ்லாவின் விற்பனை மீது பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம்.
ஜேர்மனியில் டெஸ்லாவின் கடும் வீழ்ச்சி
– 2024-ல் ஜேர்மனியில் டெஸ்லா விற்பனை 41% குறைந்தது.
– மொத்த மின்சார வாகன விற்பனை 27% குறைந்துள்ளது.
– பழைய மாடல்கள், அதிக போட்டி, மற்றும் 2023 இறுதியில் மின்சார வாகனங்களுக்கு அரசாங்க மானிய உதவி நிறைவடைந்தது இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து விற்பனை குறைவடையும் நிலையில், ஐரோப்பாவில் டெஸ்லாவின் எதிர்கால நிலை மிகுந்த சவாலாகவே இருக்கும் என கணிக்கப்படுகிறது.