புதினின் ‘பறக்கும் அதிபர் மாளிகை’ – அதிநவீன சொகுசு விமான சிறப்பு அம்சங்கள்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இலு​யுஷின் ஐஎல் – 96 – 300 பியூ என்ற அதிநவீன சொகுசு விமானத்தை பயன்​படுத்தி வரு​கிறார். இந்த விமானம், ‘பறக்​கும் அதிபர் மாளி​கை’ என்று அழைக்​கப்​படு​கிறது.

இதில் 4 இன்​ஜின்​கள் பொருத்​தப்​பட்டு உள்​ளன. ஒரு​முறை எரிபொருளை நிரப்​பி​னால் 13,000 கி.மீ. வரை விமானம் தரை​யிறங்​காமல் பறக்க முடி​யும். நடு​வானிலேயே விமானத்​துக்கு எரிபொருளை நிரப்ப முடி​யும்.

அதிபர் புதினின் விமானத்​தில் மிகப்​பெரிய கருத்​தரங்கு கூடம், பல்​வேறு அறை​கள், சொகுசு படுக்கை அறை, தங்க முலாம் பூசப்​பட்ட குளியல் அறை, மது​பான பார், உடற்​ப​யிற்​சிக்​கூடம், மருத்​துவ சிகிச்சை அறை உள்​ளிட்ட பல்​வேறு வசதி​கள் உள்​ளன.

எதிரி​களின் தாக்​குதல்​களை முறியடிப்​ப​தற்​காக விமானத்​தில் அதிநவீன ஏவு​கணை​கள் பொருத்​தப்​பட்டு உள்​ளன. இந்த விமானத்​தில் பறந்​த​படியே அணு குண்டு தாக்​குதல் நடத்த அதிபர் புதி​னால் உத்​தர​விட முடி​யும்.

இதற்​காக விமானத்​தில் சிறப்பு கட்​டுப்​பாட்டு அறை அமைக்​கப்​பட்டு இருக்​கிறது. தகவல் தொடர்​புக்​காக அதிநவீன செயற்​கைக்​கோள் தொலைபேசி வசதி செய்​யப்​பட்டு இருக்​கிறது. தேவைப்​பட்​டால் எதிரி​களின் ரேடார் கண்​காணிப்​பில் இருந்து விமானத்தை மறைந்து போக செய்ய முடி​யும்.

இந்த விமானம் 55.35 மீட்​டர் நீளம், 17.55 மீட்​டர் உயரம் கொண்​டது. இதன் எடை 250 டன் ஆகும். விமானத்​தில் ஒரே நேரத்​தில் 262 பேர் வரை பயணம் செய்ய முடி​யும்.

சமீபத்திய செய்திகள்