புற்றுநோயின் பாதிப்பிலிருந்து விடுபடத்தொடங்கியுள்ளேன்- பிரிட்டிஸ் இளவரசி

புற்றுநோய் பாதிப்பிலிருந்து தான் விடுபடத்தொடங்கியுள்ளதாக பிரிட்டிஸ் இளவரசி கேட்மிடில்டன் தெரிவித்துள்ளார்.

புற்றுநோயினால் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாக அறிவித்து பத்து மாதங்களின் பின்னர் அவர் இந்த செய்தியை சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.

லண்டனில் தான் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனைக்கு விஜயம் மேற்கொண்ட பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

புற்றுநோயிலிருந்து விடுபடத்தொடங்கியுள்ளமை பெரும் நிம்மதியளிக்கின்றது நான் மீட்சி குறித்தே அதிக கவனம் செலுத்துகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களிற்கு புதிய வழமைக்கு திரும்புவதற்கு சிறிது காலம் எடுக்கும் என்பது தெரியும் என பிரிட்டிஸ் இளவரசி தெரிவித்துள்ளார்.

கடந்த ஒருவருடகாலமாக தன்னை மிகச்சிறப்பாக கவனித்து வந்த மருத்துவ பணியாளர்களிற்கு நன்றியை தெரிவிப்பதற்காக தான் அந்த மருத்துவமனைக்கு விஜயம் மேற்கொண்டதாக கேட் தெரிவித்துள்ளார்.

வில்லியமும் நானும் அனைத்தையும் எதிர்கொண்டபோது எங்களுடன் அமைதியாக பயணித்த அனைவருக்கும் எனது மனதார்ந்த நன்றிகள் இதனை விட நாங்கள் உங்களிடம் வேறு எதனையும் கேட்டிருக்க முடியாது,ஒரு நோயாளி என்ற அடிப்படையில் எனக்கு கிடைத்த அறிவுரைகளும் கவனிப்புகளும் அற்புதமானவை என அவர் தெரிவித்துள்ளார்.

வில்லியமும் தானும் அந்த மருத்துவமனையின் போதகர்களாக மாறவுள்ளதாக அவர்  குறிப்பிட்டுள்ளார்